Header Ads



இலங்கையில் தனது தாயை தேடும், டென்மார்க் வாழ் இலங்கை இளைஞன்


இந்தியாவை பூர்வீமாக கொண்ட முகமது சாலி மரிக்கார் சித்தி ஜெசிமா என்ற பெயருடைய தாயிற்கு, கொழும்பு காசல் வீதி, சொய்சா மகளிர் மருத்துவமனையில் தான் பிறந்ததாக, குறிப்பிடும் டென்மார்கில் வசித்து வரும் குடும்பஸ்தர் இலங்கையில் தனது தாயை தேடி வருகிறார்.


டென்மார்க் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டு தற்போது  40 வயதாகும் டோர்டன் மேயர், தனது பெற்றோரை 5 ஆண்டுகளாக தேடி வருகின்றார். குறித்த நபர் தனது தாயை கண்டுபிடிக்க உதவுமாறு ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


டென்மார்க் பெற்றோர் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் தாயை தேடி வருவதாகவும், எனினும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். தாயின் 21 வயதில் தான் பிறந்ததாகவும், ஒன்றரை வயதாக இருக்கும் போது டென்மார்க் தம்பதிக்கு தான் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனது தத்தெடுப்பு ஆவணங்களில் எனது பெற்றோரின் வசிப்பிடத்தின் குறிப்பிட்ட முகவரி இல்லாததால், எனது தாயைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது.


எனவே, எனது உயிரியல் தாய் அல்லது எனது உறவினர்கள் பற்றி ஏதேனும் தகவல் அறிந்தால், பெஷன் ரணசிங்கவை 0775000547 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தெரிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.