Header Ads



வீரவன்சவுக்கு ஏமாற்றம்


இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செல்லாததாக்கத் தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் இரண்டு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை மனித உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது. 


இந்த மனுக்கள் இன்று பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 


தொடர்புடைய மனுக்களைத் தொடர முடியாது என்று சட்டமா அதிபர் எழுப்பிய ஆரம்ப ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயம், பின்னர் இந்த மனுக்களை விசாரணையின்றி தள்ளுபடி செய்தது.

No comments

Powered by Blogger.