Header Ads



கெஹெல்பத்தர பத்மேவின் சொத்துகள் முடக்கம்


தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும்  ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் பத்மசிறி பெரேரா என்பவரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.  29 பேர்ச் காணி ஒன்றும் கட்டடம் ஒன்றுமே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தி பல சொத்துக்களை வாங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவற்றின் பெறுமதி சுமார் ரூ. 50 மில்லியன் (ரூ. 5 கோடி) என தெரிவிக்கப்படுகின்றது.


அதன்படி, ‘கெஹல்பத்தர பத்மே’வுடன் தொடர்புடைய சொத்துக்கள் இன்று (22) அதிகாரப்பூர்வமாக பறிமுதல் செய்யப்பட்டன.

No comments

Powered by Blogger.