செல்பி எடுப்பதற்கு பொலிஸ் அறிக்கையை கேட்கும் நிலைமைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்
செல்பி எடுப்பதற்கு பொலிஸ் அறிக்கையை கேட்கும் நிலைமைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன் என்று மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சில அமைச்சர்களின் கனவில் கூட நான் தான் தெரிகிறேனாம். அதனால் நான் மிகவும் அவதானமாகவே இருக்கிறேன். சிலர் 'எனது அன்பே' என எனது பெயரை தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் மற்றும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தலில் பக்கம் சார்ந்து செயற்படுகிறது. இதில் யாருக்கும் நீதி கிடைக்கப் போவதில்லை.
அரசுக்கு சார்பான பாதாள குழுவினரை பாதுகாக்கவும், அவர்கரூடாக எதிர்க்கட்சியினை அடக்கி ஆள நினைக்குமானால் அதற்கு எவ்விதத்திலும் நாம் இடமளிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment