Header Ads



மனமுடைந்த மாணவி

 
யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நேற்று 2வது மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,


விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்துள்ளனர். 


முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.


இந்நிலையில் அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர். இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.


இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் குறித்த மாணவி இதனை தெரிவித்துள்ளார். 


படுகாயம்டைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

No comments

Powered by Blogger.