பள்ளிவாசல்களின் உதவியை நாடும் பொலிஸார்
- பாறுக் ஷிஹான் -
வீதி விபத்துக்களை தடுப்பதற்கான கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல்களின் உதவியை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி கேட்டுள்ளார்.
வீதி விபத்துக்களினால் மரணம் ஏற்படுவதுடன் பாரிய காயங்கள் ஏற்பட்டு ஊனமுற்றவர்களாக பலர் காணப்படுகின்றனர்.இதனால் அவர்களின் குடும்பங்கள் பாரிய பின்னடைவை ஏற்படுத்துகின்றது. அத்துடன் ஏனைய பொதுமக்களுக்கும் சிரமங்களும் ஏற்படுகின்றன. எனவே இவ் வீதி விபத்துக்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக சமூக உணர்வுடன் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல்களின் ஒத்துழைப்பினை கேட்டுக் கொள்கின்றேன்.
எனவே தாங்கள் வீதி விபத்துக்களில் இருந்து மீளுவதற்காக வாகனங்களை நல்ல முறையில் பராமரிப்பதோடு அவ்வாகனங்களுக்குரிய ஆவணங்களை உரிய காலங்களில் பெற்றுக் கொண்டு வீதி விதி முறைகளை முறையாக பேணுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
சாரதி என்ற வகையில் பொறுமையை பேணுமாறும் மேலும் தங்களது பிள்ளைகளுக்கு உரிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதுடன் மோட்டார் சைக்கிளை இளம் சிறார்களுக்கு கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார்.
Post a Comment