Header Ads



நாங்கள் கழிப்பறை நீரைக் குடித்ததை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா..? இஸ்ரேலில் கொடூர அனுபவம்


மனிதாபிமானப் பொருட்களை காசாவுக்கு கொண்டு சென்றபோது,  கைது செய்யப்பட்ட மலேசிய நாட்டு 2 சகோதரிகள், இஸ்ரேலில் தமக்கு ஏற்பட்ட கொடூர அனுபவத்தை துருக்கிய ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளனர்.


“நாங்கள் கழிப்பறை நீரைக் குடித்ததை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? சிலர் மிகவும், மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தனர், ஆனால் அவர்கள் [இஸ்ரேலியர்கள்], ‘அவர்கள் இறந்துவிட்டார்களா? இல்லையென்றால், அது என் பிரச்சனையல்ல’ என்று கூறினர்.


அவர்கள் மிகவும், மிகவும் கொடூரமானவர்கள்..


நாங்கள் அக்டோபர் 1 ஆம் தேதி சாப்பிட்டோம். இன்று எங்கள் முதல் உணவு. எனவே மூன்று நாட்கள், நாங்கள் சாப்பிடவில்லை - கழிப்பறையிலிருந்து மட்டுமே குடித்தோம்.”


இஸ்ரேலிய  அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்ட மலேசிய சகோதரிகள் மற்றும் பாடகி- ஹெலிசா ஹெல்மி மற்றும் ஹஸ்வானி ஹெல்மி,  இஸ்தான்புல்லில் தரையிறங்கியபோது இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.