ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் நேற்று (6) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனை நிராகரிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட்டு வருவதுடன், இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.
ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இலங்கை அரசாங்கம் குறித்த தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

Post a Comment