Header Ads



சனத்தொகையில் அதிக வளர்ச்சி வேகத்தை வெளிகாட்டியுள்ள இலங்கை முஸ்லிம்கள்


2012 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் அதிக வளர்ச்சி வேகத்தை இலங்கை முஸ்லிம்கள் வெளிகாட்டியுள்ளனர்.


நாட்டின் மொத்த சனத்தொகையில் 74.1 வீதமானோர் சிங்களவர்களென கணிப்பிடப்பட்டுள்ளது.


12.3 வீதமான இலங்கை தமிழர்களும், 10.5 வீதமான இலங்கை சோனகர் மற்றும் முஸ்லிம்களும், 2.8 வீதமான மலையகத் தமிழர்களும், எஞ்சிய 0.3 வீதமானவர்கள் பறங்கியர்கள், மலாயர்கள், இலங்கை செட்டிகள், பாரதர்கள் மற்றும் வேடர்கள் உள்ளிட்ட ஏனைய இனக் குழுக்களாகவும் பதிவாகியுள்ளனர்.


சனத்தொகையில் 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இன ரீதியில் இலங்கை தமிழர்களின் வருடாந்த அதிகரிப்பானது, 0.4 வீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.


எனினும், மலையகத் தமிழர்களின் அதிகரிப்பு எண்ணிக்கை, - 2.6 வீதமாக பதிவாகியுள்ளது.


அதன்படி மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. (Hiru)

No comments

Powered by Blogger.