ரஷ்யாவில் பிடிபட்டுள்ள பாதாள உலகக் குற்றவாளியான ரோட்டும்ப அமில
ரஷ்ய பாதுகாப்புப் பிரிவின் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ரோட்டும்ப அமிலவுக்கு எதிராக தற்போது ரஷ்ய நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இன்டர்போல் சிவப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, குடியேற்றச் சட்டங்களை மீறி ரஷ்யாவிற்குள் நுழைந்த நிலையில், மார்ச் மாதம் ரோட்டும்ப கைது செய்யப்பட்டார்.
ரோட்டும்ப அமிலவை நாட்டிற்கு அழைத்து வரும் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஆவணங்களும் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment