இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா..?
இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்தது. அப்படியானால் மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்துக்கு எங்கே நேரம் இருந்தது. இப்போது இஷாரா கைது செய்யப்பட்டுள்ளார். மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்துக்கு நேரம் உள்ளது. பாதாள உலக கும்பல் மற்றும் போதைப்பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கத்திடம் பல வசதிகள் உள்ளன.
எனவே பாதாள உலக கும்பல் மற்றும் போதைப்பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. ஆனால் அரசாங்கம் தவறு செய்தால், அதனை சுட்டிக்காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா என விமர்சித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ Mp இதனை கூறியுள்ளார்.

Post a Comment