தெலுங்கானா முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் அரச ஊழியர்கள் தங்கள் பெற்றோரைப் புறக்கணித்தால், அவர்களின் மாத வேதனத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை கழிக்கப்பட்டு, அந்த தொகை நேரடியாக அவர்களின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
அரச நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சட்ட வரைவு உருவாக்க குழு ஒன்றை அமைக்க தலைமைச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment