Header Ads



ஜனாதிபதியின் வெளிநாட்டு முதலீடுகளுக்கான விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப்


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை   நியமித்துள்ளார்.


உலகளாவிய முதலீட்டு கூட்டாண்மை தொடர்பில் ஹனீப் யூசுப் அவர்களுக்கு உள்ள அநுபவம் மற்றும் இலங்கையின் தனியார் துறையின் அபிவிருத்திக்கு அவர் ஆற்றிய நீண்டகால பங்களிப்பை கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க அவருக்கு உள்ள இயலுமையை பாராட்டும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 


ஹனீப் யூசுப், மேல் மாகாண ஆளுநர்  நியமனத்திற்கு மேலதிகமாக  சேவையாக இப்பதவியில் செயற்படுவார்.

No comments

Powered by Blogger.