Header Ads



9 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ள 1,248 கிலோ ஹெரோயின்


கடந்த 9 மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 1,248 கிலோகிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகருமான மினுர செனரத் தெரிவிக்கிறார்.


இந்த காலப்பகுதியில் 1,852 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், கஞ்சா 14,221 கிலோகிராமும், கொக்கெய்ன் 29 கிலோகிராமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க பொதுமக்கள் வழங்கும் ஆதரவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பொலிஸார் குறித்த தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

No comments

Powered by Blogger.