Header Ads



இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது



கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்றத்தின் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 


25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி  இந்தக் கொலையில் உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து இவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று  பொலிஸ் தெரிவித்திருந்தது. 


இந்நிலையில், இன்று (14) நேபாள பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.