அவதூறான கட்டுரை - விஜயதாசவுக்கு 50 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், அப்போதைய ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு மாறிய விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக, லேக் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும் 'சிலுமின' பத்திரிகை 2 பக்ககட்டுரையொன்றை வெளியிட்டது. இந்த கட்டுரை, அவதூறு பரப்பும் வகையில் புனையப்பட்டது என்றும் இதற்காக இழப்பீடு கோரி, 2009 லேக் ஹவுஸ் நிறுவனத்துக்கும், அதன் பிரதம ஆசிரியருக்கும் எதிராக விஜயதாச வழக்குத் தாக்கல் செய்தார்.
2010 ஆம் ஆண்டு விஜயதாசஷவுக்கு 50 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம், உத்தரவிட்டது. எனினும், மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து லேக் ஹவுஸ் நிறுவனம் கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீடு 2013 ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.
மேல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து லேக் ஹவுஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடும், நீண்ட விசாரணைக்குப் பிறகு, இன்று நிராகரிக்கப்பட்டது. இதனூடாக, விஜயதாச ராஜபக்ஷவுக்கு 50 கோடி ரூபாவினை நஷ்ட ஈடாக வழங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டது.

Post a Comment