கம்பளை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
கம்பளையில் தொழுவ விஹாரை ஒன்றின் முன் நடந்த வீதி விபத்தில் 3 பேர் உயிரிழந்து, மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பலர் மீது மோட்டார் வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர் பயிற்சி பெற்று வந்த ஒரு பெண், அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேகமாக வந்த மோட்டார் வாகனம், லாரியை முந்திச் செல்லும் போது பிரேக்கைப் பிடித்ததாக நினைத்து, எக்ஸ்லேட்டரை அமத்தியதால் மோட்டார் வாகனம், வேகமாகச் சென்று, வீதியில் பயணித்தவர்களை மோதித்தள்ளியுள்ளது. விஹாரைக்கு சென்று, வீடு திரும்பியவர்களே இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment