Header Ads



இன்று 2 ஆவது தடவையாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி


நாட்டில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 


அதன்படி நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது, ஒரு பவுன் தங்கத்தின் விலை 30,000 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. 


செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 


24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று காலை 350,000 ரூபாவாக குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பிற்பகலில் பவுன் ஒன்றின் விலை 340,000 ரூபாவாக மேலும் குறைவடைந்துள்ளது. 


அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று காலை 322,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிற்பகலில் பவுன் ஒன்று 312,000 ரூபாவாக மேலும் குறைவடைந்துள்ளது. 


கடந்த சில நாட்களாக 410,000 ரூபாய் வரை அதிகரித்த 24 கரட் தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.