Header Ads



மகிந்த ராஜபக்சவை கொல்லக் கூடிய அச்சுறுத்தல் உள்ளது - UNP


சில குழுக்கள் ஆயுதங்களைக் கொண்டு மகிந்த ராஜபக்சவை கொல்லக் கூடிய அச்சுறுத்தல் உள்ளது. எனவே, இலங்கை அரசால் அவர் பாதுகாக்கப்பட வேண்டும். அமெரிக்காவில் ஜனாதிபதி ஒருவர் பதவிக் காலத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி என அழைக்கப்படுவதில்லை. மாறாக அவர் உயிர் வாழும் வரை பதவி வகித்தல் மற்றும் அதன் பின்னரான நிலைமை ஆகிய இரண்டு மாத்திரமே காணப்படுகின்றது.


சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் சகல ஆளும், எதிர்க்கட்சி தலைவர்களும் அகால மரணமடைந்தவர்களாக அல்லது கொலை முயற்சியில் இருந்து தப்பியவர்களாகவே உள்ளனர்.


இலங்கையில் அரசியல் கலவரம் வெடித்த போது முன்னாள் ஜனாதிபதி ரணில் பிரதமராகப் பதவி வகித்தார். அவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட போதிலும், அவர் பயந்து ஓடவில்லை. மாறாக ஏனையோரது வீடுகள் எரிக்கப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். ஆனால், நேபாள பிரதமர் அந்த சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றதாலேயே ஏனையோர் பாதிக்கப்பட்டனர் என்பதே எனது நிலைப்பாடாகும். எனவே, தேசியத் தலைவர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு அந்தக் கௌரவம் வழங்கப்பட வேண்டும்


(ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளர் வஜிர அபேவர்தன)

No comments

Powered by Blogger.