இஸ்ரேலிய சைக்கிளோட்டக்காரர்களுக்கு, ஸ்பெயினில் அதிர்ச்சி
ஸ்பெயின் நாட்டில் நடந்த பிரபல சைக்கிள் பந்தயம் நிறைவடைந்தது. இதில், இஸ்ரேலைச் சேர்ந்த 'பிரீமியர் டெக்' என்ற குழுவும் பங்கேற்றது. அந்த நாளில், ஸ்பெயினில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினர். அவர்கள் சாலைகளை மறித்து, மாட்ரிட் நகரத்தின் முக்கியப் பாதைகளை ஸ்தம்பிக்கச் செய்தனர். இறுதியில், அவர்கள் சைக்கிள் பந்தயம் நிறைவடையும் இடத்திற்குள் புகுந்து, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்திருந்த ஏற்பாட்டாளர்கள், அவர்கள் வருவதற்கு முன்பே நிகழ்வை ரத்து செய்துவிட்டு அவ்விடத்திலிருந்து கிளம்பிவிட்டனர்.

Post a Comment