Header Ads



கம்மன்பில கைது செய்யப்படுவாரா..?


முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்படுமானால், அது தொடர்பில் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 


தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி உதய கம்மன்பில தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 


இதன்போதே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.