இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தேர்தல் பிரசார கூட்டத்தின் போது உயிரிழந்த உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment