Header Ads



குற்றவாளிகளுடன் தொடர்புகளை பேணி பணம் பெற்ற அரசியல்வாதிகளின் விபரங்கள் தெரிய வந்துள்ளது - ஜனாதிபதி


குற்றக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிய MP க்கள், அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது.  இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த விபரங்கள் தெரியவந்ததது. இலங்கையில் 50% க்கும் மேற்பட்ட போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு இந்தக் குற்றக் குழு பொறுப்பேற்றுள்ளது. சில MP க்கள்,  இந்த குற்றக் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று ஒவ்வொரு மாதமும் பணம் பெற்றுள்ளனர்.  வரி வசூலிப்பது போலவே, சில MP க்கள்,  இந்த குற்றக் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் சென்று பணம் பெற்றுள்ளனர். சில அமைச்சர்கள் அவர்களை ஒவ்வொரு மாதமும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து வந்துள்ளனர். குறித்த தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாட்டில் ஒரு பெரிய வலையமைப்பை உருவாக்கி செயற்பட்டுள்ளனர். 


இன்று (17) கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீளத்தொடங்குவதற்கான ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி அநுரகுமார இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.