புது உறவு மலருமா..?
SJB யில் இணைந்த தங்களது கட்சி உறுப்பினர்களின் மீது விதிக்கப்பபட்ட அனைத்து கட்சி தடைகளையும் நீக்குவதற்கு நேற்று (16 ) மாலை கூடிய UNP செயற்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் ஏற்படக்கூடிய சட்டப் பின்னணியை ஆராய முன்னாள் சட்டமா அதிபர் தலைமையில் ஒரு குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு செயற்குழு எடுத்த இந்த நடவடிக்கையின் காரணமாக, அவர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து பணியாற்றுவதற்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment