முஸ்லிம் சமூகம் காட்டிய மனிதநேயத்திற்கு, நன்றியைத் தெரிவிக்கிறேன் - ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர
எல்ல பகுதியில் நிகழ்ந்த பேருந்து விபத்தை அடுத்து உடனடியாக செயற்பட்டு காயப்படட்டவர்களை மீட்கவும், இறந்தவர்களின் உடல்களை அவர்களது வீடுகளுக்கு எடுத்துச்செல்லவும் உதவி புரிந்த முஸ்லிம் சமூகத்திற்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தங்காலை பகுதிகளுக்கு கொண்டு செல்ல தியத்தலாவ, பண்டாரவள, வெலிமட, மொனராகலை, பதுளை ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலிருந்து இலவச இறுதிச் சடங்கு வாகனங்களை வழங்க அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒரு சமூகமாக நாம் அனைவரும் மனிதர்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த பாடமாகும். இந்த கடினமான காலங்களில் காட்டிய மனிதநேயத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதுளை அன்வர் ஜும்மா பள்ளிவாசலுக்குச் அண்மையில் நேரில் சென்ற ஆளுநர் கபில ஜயசேகர அங்கு ஊர் மக்களையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் நேரில் சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment