Header Ads



கத்தாரின் எந்த மூலைக்குச் சென்றாலும்...?

 
தூஃபான் அல் அக்ஸாவுக்காக கத்தார் வழங்கிய உயிர் தியாகியை சந்திக்கச் சென்றிருந்தேன்.


பிரமாண்டமான மஸ்ஜிதில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து  ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினேன்.


இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் எழுதப்படவுள்ள ஃபலஸ்தீன விடுதலை வரலாற்றில், கத்தார் மண்ணிலிருந்து உருவான ஒரு பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்.


உயிர் தியாகி பத்ர் சாத் முஹம்மது அல்-ஹுமைதி அல்-தௌசரி.


அல்லாஹ் அவரையும் மற்ற உயிர் தியாகிகளையும் ஏற்றுக்கொள்வானாக.


நமக்குப் பழக்கமான இடங்களுக்குக்கூட, வெடிகுண்டுகளின் அதிர்வுகளை உணரக்கூடிய அளவுக்கு அந்தப் புயல் தனது வருகையை அறிவித்த நாட்கள் அவை.


தூஃபானுல் அக்ஸாவின் எதிரொலிகள், ஏதோ எதிர்பாராத அல்லது நடக்கக்கூடாத ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்ற எண்ணத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், தவிர்க்க முடியாத நிகழ்வுகளால் நாம் அதிர்ச்சி அடைவதில்லை.


கத்தாரின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஃபலஸ்தீனையும் அதன் ஆதரவற்ற மக்களையும் நினைவுகூரும் தெருக்கள், வணிக வளாகங்கள், மற்றும் மேடைகளைக் காணலாம்.


ஃபலஸ்தீனச் செய்திகளை அறிந்துகொள்ள நான் நாடும் ஒரே ஊடகம் கத்தாரின் அல் ஜசீராதான். சியோனிச இஸ்ரேலால் இதுவரை கொல்லப்பட்ட 270 பத்திரிகையாளர்களில் பலர் அல் ஜசீராவைச் சேர்ந்தவர்கள்.


 கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், எந்த நேரத்திலும் சிதறித் தெறிக்கக்கூடிய நிலையில், அவர்கள் அந்தப் பயங்கரமான இனப்படுகொலையைத் தொடர்ந்து ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


கொடிய தாக்குதல்களுக்குப் பிறகும், கத்தார் "அந்த மக்களை நாங்கள் தனியாக விடமாட்டோம், அமைதி முயற்சிகளில் இருந்து பின்வாங்க மாட்டோம்" என்று உறுதியளித்துள்ளது.


இது ஒரு நல்ல நோக்கத்தின் அடிப்படையில்தான் நடக்கிறது. வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது.


ஒரு சாதாரண பிரார்த்தனைகூட செய்யத் தயங்கும் அரபு நாடுகளுக்கு மத்தியில், கத்தார் பல்வேறு குறைகள் இருந்தாலும் தனித்து நிற்கிறது. எதிர்காலம் அல்லாஹ்வின் கையில் உள்ளது.


இது விபத்து அல்ல. இந்த தியாகத்தை அவர்கள் தங்கள் உழைப்பால் சம்பாதித்திருக்கிறார்கள்.


தியாகியைப் பற்றி அவரது சகோதரர் சவுத் அல்-தௌசரி "X" தளத்தில் எழுதிய குறிப்பு, பலரையும் உருக்கி, உள்ளத்தைத் தொட்டது.


"தியாகி பத்ர் அல்-தௌசரி,


போர்க்களம் அல்லாத ஒரு மண்ணில் தியாகியாகும் அளவுக்கு உமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே என்ன சகோதாரா இருந்தது?


உயரிய பதவிகள் எங்கு எழுதப்பட வேண்டும்? யாருடைய இரத்தம் தூய்மையாக்கப்பட வேண்டும்? எந்த நோக்கம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்? இதையெல்லாம் படைத்தவனால் மட்டுமே அறிய முடியும்!


சுயநலமற்றவர்கள் அடைய ஆசைப்பட்ட அனைத்தையும் நீ அடைந்துவிட்டாய்!


உன்னைத் தேர்ந்தெடுத்தவனும், உன் பதவிகளை உயர்த்தியவனும், உயிர் தியாகத்தை வழங்கி உன் பெயரை அழியாததாக்கியவனும் எவ்வளவு பரிசுத்தமானவன்!"


✍️ Jippoos jam

No comments

Powered by Blogger.