முரளிக்கு நீதி வேண்டும்..
அடிவாங்கியதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல ஆனால் தன்மானத்தோடு , நிரபராதி யாக இருக்கும் ஓர் மனசு குற்றவாளி எனும் அவப்பெயரை எப்படி சுமந்து கொள்ளும் !!
செய்யாத குற்றத்திற்காக குற்றவாளி என்று விளங்கிடப்படும் உள்ளம் உடைய அனைத்து ஜீவன்களினதும் விடியலுக்கான ஓர் அடையாளப் போரட்டமே , புசல்லாவையை சேர்ந்த செல்லமாக "முரலி" என அழைக்கப்படும் உலக நீதியில் அதிருப்தி அடைந்து ஓய்ந்து போன இவ் ஆத்மா...
ஆழ்ந்த இரங்கல்கள் , மனம் பதறுகிறது , இச் சகோதரனுக்கான நீதி நிச்சயம் மறுமையில் அல்லாஹ்விடம் கிடைக்கும் என்ற ஒரு வார்த்தை மாத்திரமே ஆறுதல் !
உணர்ச்சிவசப்பட்டு கருமம் ஆற்றுவதை விட தீர விசாரித்து தீர்மானிக்க வேண்டும் என்பது ஒருபுறம் , மறுபக்கத் தால் தான் குற்றமே செய்திருந்தாலும் தண்டிக்க முனைவதை விட குற்றத்தில் இருந்து மீண்டு வருவதற்கு சந்தர்ப்பம் கொடுப்பதை முதன்மைப்படுத்த வேண்டும்.
" விபச்சாரம் செய்து நான் விபச்சாரம் செய்து விட்டேன் தண்டனை தாருங்கள்! என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட மாஇதைப் பார்த்து "நீங்க சும்ம சொல்ரீங்க நீங்க விபச்சாரம் செய்திருக்க மாட்டீங்க சும்மா ஒரு பெண்ணை பார்த்திருப்பீர்கள் " போய் வாருங்கள் !என தண்டனையை விட குற்றச் செயல்களில் இருந்து மீண்டு வருவதற்கு வழி அமைத்து கொடுப்பதே முதன்மையானது என்பதை இறைத் தூதர் போதித்தார்
அதே நேரம் குற்றம் செய்த நபரை வெறுக்க கூடாது , குற்றச் செயலையே வெறுக்க வேண்டும் என்பதும் ஓர் அடிப்படை ....
ஊர்களில் ஏதாவது ஒன்றுக்காக மாட்டிப்பட்ட ஒருவரை பிடித்து நையப் புடைவது மிகப்பெரிய ஆபத்து , மிகப் பெரிய அநீதி என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்
ஏன் தெரியுமா ? குற்றத்தோடு , சம்பந்தம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் குறித்தவரிடம் ஓர் அழகான உள்ளமும் , அமைதியான ஆன்மாவும் அவனுள்ளே பொக்கிஷங்களாக புதைந்திருக்கின்றது !
Ash-shikeh Husni Haneefa (Naleemi)

Post a Comment