Header Ads



பலஸ்த்தீனர்களுக்கு தனிநாடு என்பது பரிசு அல்ல, அது உரிமை - ஐ. நா. செயலாளர்


பாலத்தீனர்களுக்கு தனிநாடு என்பது பரிசு அல்ல. அது உரிமை. இஸ்ரேலும், பாலத்தீனும் நீடித்த அமைதி பெற இரு நாடுகள் தீர்வே ஒரே வழி. இது மத்திய கிழக்கில் சமாதானத்தையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் செயலாளர்  அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.


பாலத்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்த பிறகு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக  பிரித்தானியா, கனடா பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தமையை,  பயங்கரவாதத்துக்கு மிகப் பெரிய பரிசு கிடைத்தது என வர்ணித்த நிலையில் ஐ.நா. செயலாளரின் இந்த பதிலடி கருத்து வந்துள்ளது.

No comments

Powered by Blogger.