பலஸ்தீன் அங்கீகாரம்: உண்மையான நோக்கம் என்ன..?
செர்பியாவுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தி, முஸ்லிம் போராளிகளை வெளியேற்றின. அதன்பிறகு, மேற்கத்திய நாடுகளின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு போஸ்னிய அரசாங்கத்தை உருவாக்கின.
அப்போது, ஐரோப்பாவில் ஒரு இஸ்லாமிய நாடு உருவாவதை எந்த விலையிலும் தடுக்க வேண்டும் என்று அப்போதைய பிரிட்டிஷ் தலைவர்கள், ஐரோப்பிய தலைவர்களுக்கு எழுதிய கடிதம் கசிந்து பெரும் செய்தியானது.
அந்த மாஸ்டர் பிளான் தொடர்ச்சியாகத்தான், போஸ்னியாவில் செர்பியாவுக்கு எதிராகச் செயல்படுவதாக உலகை நம்பவைத்து, மேற்கத்திய கூட்டணி களமிறங்கியது.
சியோனிசத்தை முஸ்லிம் மண்ணில் நிலைநிறுத்தியவர்கள், அதே தந்திரத்தை மீண்டும் செயல்படுத்த முயல்கின்றனர்.
ஃபலஸ்தீன மக்களுக்கு எதிராக சியோனிச பயங்கரவாதிகள் தற்போது நடத்திவரும் இனப்படுகொலையில் மேற்கூறிய நாடுகளின் நேரடிப் பங்கு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதேநேரத்தில், ஒரு ஃபலஸ்தீன நாடு என்ற உலகளாவிய கருத்தை இந்த மேற்கத்திய கூட்டணியால் புறக்கணிக்க முடியாது. இந்த நாடுகள் உட்பட பொதுமக்களின் கருத்து, மேற்கத்திய சக்திகளை அத்தகைய முடிவை எடுக்க கட்டாயப்படுத்தியுள்ளது.
சியோனிசத்தின் இருப்புக்கு உள்ள அச்சுறுத்தலைக் குறைத்து, ஃபலஸ்தீனியர்களுக்காக, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு நிர்வாகத் தலைமையைக் கொண்டு வருவதுதான் இந்த மேற்கத்திய சக்திகளின் நோக்கம்.
சுருக்கமாகச் சொன்னால், ஃபலஸ்தீனில் உள்ள போராட்ட இயக்கங்களைக் கலைத்து, அவற்றை முக்கியத்துவம் இல்லாததாக மாற்றுவது. தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முடிவெடுக்கும் கைப்பாவைகளை ஃபலஸ்தீன தலைமைப் பொறுப்பில் நியமிப்பது.
ஃபலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் வரலாற்று முடிவை எடுக்கத் தயாராகும் மேற்கத்திய சக்திகளின் மனதில் உள்ள விசயம் இதுதான்.
இந்தத் தந்திரங்களை ஃபலஸ்தீன மக்கள் எப்படி முறியடிப்பார்கள் என்பதுதான் தற்போது முக்கியமான கேள்வி.
PK Nowfal

Post a Comment