பாலஸ்தீனுக்கு ஆதரவாக சம்மாந்துறையில் , துஆ பிராத்தனை, ஆர்ப்பாட்டம், மகஜர் கையளிப்பு
பலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் மனிதப்படுகொலைகளை உடனடியாக நிறுத்தக்கோரியும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு அங்கு நடைபெற்றுவரும் மனிதப்படுகொலைகளை நிறுத்துமாறும் அந்நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதோடு பாலஸ்தீனத்தை தனி ஒரு நாடாக அங்கீகரிக்குமாறு வேண்டி இன்று (19) சம்மாந்துறையில் விசேட துஆ பிராத்தனையும் கண்டன நிகழ்வும் இடம்பெற்றது.
சம்மாந்துறை பொதுமக்களும், சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ் - சூரா உள்ளிட்ட உயர்சபையான முச்சபைகளின் ஏற்பாட்டில் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் உள்ள பத்ர் ஜும்மா பெரியபள்ளிவாசலில் ஜும்மா தொழிகையின் பின் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதை தொடர்ந்து பத்து கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்குமாறு வேண்டி முச்சபைகள் சார்பில் அதன் முக்கியஸ்தர்களினால் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். எம்.ஹனிபாவிடம் கையளிக்கப்பட்டது
யூ.எல்.எம். றியாஸ்.


Post a Comment