ஜனாதிபதி அறுகம்குடாவுக்கு செல்ல வேண்டும், அப்பகுதியை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ளனர்
ஜனாதிபதி உண்மையில் அறுகம் குடாவுக்கு செல்ல வேண்டும். அப்பகுதியை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருக்கும் போது, பலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுத்து விட்டு தற்போது இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றது. இந்த அரசியல் நாடகத்தை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி கச்சத்தீவுக்கு விஜயம் செய்ய வேண்டியதில்லை. விஜயால் மட்டும் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து பெற முடியாது. கச்சத்தீவு என்பது இந்தியாவின் மத்திய அரசாங்கம் பேச வேண்டிய விடயமாகும். விஜயை விட பலம் வாய்ந்தவர்கள் ஆட்சி செய்தும், கச்சத்தீவை வாங்க முடியாமல் போனது.
பாராளுமன்ற அமர்வில் இன்று (09.09.2025) முஜிபுர் ரஹ்மான் Mp இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment