காணாமல் போயுள்ள சிறுமி
தாய் தந்தையர் தோட்ட பணிக்கு சென்ற வேளை 16 வயது வயதுடைய சிறுமி காணாமல் போயுள்ள சம்பவம் மஸ்கெலியா சாமிமலையில் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.
அத்துடன் வியாழக்கிழமை (04) இன்று காலை சந்தேகத்திற்கு இடமான வேன் ஒன்றை அப் பகுதியில் கண்டதாகவும் அதில் இருந்த இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது என காணாமல் போன சிறுமியின் தந்தைகூறியுள்ளார்.
காணாமல்போண சிறுமியின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 0522277222 எண் மூலம் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
செ.தி.பெருமாள்.

Post a Comment