ஜப்பானிய வர்த்தக சமூகத்திற்கு ஜனாதிபதி அழைப்பு
இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை ஆராய்வதில் இணையுமாறு ஜப்பானிய வர்த்தக சமூகத்திற்கு ஜனாதிபதி அழைப்பு
ஜப்பான்-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, தனியார் துறையை அதற்கு ஊக்குவிப்பதற்கும், இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை ஆராய்வதற்கும், கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜப்பானிய வர்த்தக சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO) தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஜப்பான் வர்த்தக சமூகத்தின் சுமார் 200 சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டதோடு, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO), பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சு (METI), ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜப்பான்-இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழு மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை (BOI) ஆகியவை இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

Post a Comment