Header Ads



கோடி கோடியாக சட்டவிரோதமாக சம்பாதித்த முன்னாள் அமைச்சரின் மகன்


சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல செயற்பட்ட காலப்பகுதியில் அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றி, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல  18 மாத காலப்பகுதியில் 27 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை குவித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.


கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய அவரது மகன் ஒன்றரை ஆண்டுகளில், ஈட்டிய வருமானத்தை வெளிப்படுத்த முடியாத வகையில் 27 கோடி ரூபாயை செலவிட்டுள்ளார்.


கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை கொள்வனவு செய்யவும், ஆடம்பரமான நவீன கார்களை வாங்குவதற்கும், அவரது மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்புகளை செய்யவும் 27 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை செலவிட்டதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது.

No comments

Powered by Blogger.