Header Ads



ஐஸ்ஸை விட மிக மோசமான போதைப் பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது


நாட்டில் ஐஸ் என்ற மெத்தம்பேட்டமைனை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.  வெலிகமயில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளை பரிசோதித்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


 பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு வெளிநாட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார். 


அரசு பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் முதற்கட்ட பரிசோதனைகளின்படி, அந்த இடத்தில் ஐஸ் போதைப்பொருளை விட ஆபத்தான புதிய போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


அடுத்த சில நாட்களில் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.