83 கடவுச்சீட்டுக்களுடன் 2 பேர் கைது
வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரகொல்ல, கணேமுல்ல பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனையின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் மற்றும் கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து கணேமுல்ல காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment