Header Ads



குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணி அடுத்தவாரம் ஆரம்பம் - 29 இலட்சம் ரூபா ஒதுக்கீடு


மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதற்காக 29 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.


களுவாஞ்சிக்குடி நீதவான் விடுத்த உத்தரவிற்கமைய குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.


குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான விசாரணை மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அறிக்கை விடுத்திருந்தது.


அதற்கமைய, எதிர்வரும் 18ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவானிடம் இது தொடர்பான விசாரணை அறிக்கைகள் சமர்பிக்கப்படவுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.


குறித்த அகழ்வுப் பணிகள் தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.