10 இலட்சம் பேரில் ஒருவர் அம்ஜத் றஹ்மான்
கோழிக்கோடு மாவட்டம் சேன்னமங்கலூர் சேர்ந்த அம்ஜத் றஹ்மான் அஜ்மானில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்.
பத்து வருடங்கள் முன்பு முக்கம் எம்.ஏ.எம்.ஓ கல்லூரியில் அம்ஜத் படித்த போது அங்கு நடந்த Blood Stem Cell விழிப்புணர்வு முகாமில் மாணவர்களிடம் நடந்த பரிசோதனையில் இரத்த மாதிரி சேமித்ததில் பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே இருக்கக்கூடிய அபூர்வ வகை ஸ்டெம் செல் அம்ஜத் றஹ்மானுக்கு இருந்தது தெரியவந்தது.
தற்போது கேரள மாநிலத்தில் ஒரு பத்து வயது சிறுவன் "லுகீமியா போன்மேரோ" எனும் அரியவகை இரத்தப்புற்று நோய் பாதித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எல்லா வகையான சிகிச்சையும் அளித்தும் பலனின்றி இறுதியாக கொச்சி அமிர்தா மருத்துவனையில் சிகிச்சையளித்த மருத்துவர் குழு குறிப்பிட்ட பிரிவு ஸ்டெம் செல் தானம் கிடைப்பதன் மூலம் சிறுவனின் உயிரை காக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
சிறுவனின் பெற்றோரும் மருத்துவர்களும் பத்து லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இருக்கக்கூடிய அரியவகை ஸ்டெம்செல் தானம் பெற தகுதியான நபர்கள் குறித்து தேடத்துவங்கினர்.
இறுதியில் பத்து வருடங்கள் முன்பு கல்லூரியில் நடந்த முகாமில் பதிவு செய்த ஆவணங்களில் அம்ஜத் றஹ்மான் எனும் மாணவருக்கு இந்த பிரிவு உள்ளது தெரியவந்தது.
கல்லூரியில் சென்று அம்ஜத் குறித்த தகவல்கள் சேகரித்த சிறுவனின் பெற்றோர் அவர் அஜ்மானில் பணியாற்றும் தகவல் தெரிந்து அவரது போன் நம்பர் கிடைத்து தொடர்பு கொண்டு தங்கள் மகனின் நிலைகுறித்து பேசியதுடன் ஸ்டெம்செல் தானம் செய்வதன் மூலம் அவன் உயிர்பிழைக்க முடியும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
அம்ஜத் றஹ்மான் இதுகுறித்து தனது மனைவி பெற்றோருடன் பேசிய போது அவர்கள் தானம் செய்ய பூரண சம்மதம் தெரிவிக்க அம்ஜத் றஹ்மான் அடுத்த நாளே அஜ்மானில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் வந்து சேர்ந்தார்.
கொச்சி அமிர்தா மருத்துவனையில் அம்ஜத் றஹ்மான் ஒருவாரம் தங்க வைக்கப்பட்டு ஸ்டெம்செல் தானம் சார்ந்த பரிசோதனைகள் பாசிட்டிவாக சிறுவனின் உயிர் காக்க பயன்பட்டது அம்ஜத்துக்கு நெகிழ்வான தருணம்.
எல்லாவற்றுக்கும் மேலாக தனது நிறுவனத்தில் பணியாற்றும் அம்ஜத் ஒரு பத்து வயது சிறுவனின் உயிர் காக்கும் நல்லெண்ணத்துடன் ஸ்டேம்செல் தானம் செய்ய கேரளம் செல்லும் விபரங்களை தெரிந்து கொண்ட அவர் அஜ்மானில் பணியாற்றும் ஹாபிடட் குரூப் சேர்மன் சம்சு ஸமான் அம்ஜத் றஹ்மானுக்கு விடுமுறை அளித்ததுடன் போய் வருவதற்கு விமான டிக்கெட்டும் வழங்கி வழியனுப்பி வைத்தார்..
அம்ஜத் றஹ்மானுக்கு இறைவன் அருள் புரிவானாக...
Colachel Azheem

Post a Comment