Header Ads



செப்டம்பர் மாத இறுதிக்குள் PTA ரத்து


பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிடப்படும். செப்டம்பர் மாத இறுதிக்குள் ரத்து செய்யப்படும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவின் அறிக்கை அடுத்த மாத தொடக்கத்தில் கிடைக்குமென்றும் அவர் கூறினார்.  நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக இயற்றப்படும் என்றார்.

இன்றைய (22) நாடாளுமன்றத்தில் அமர்வில் உரையாற்றுகையிலே என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  இதனைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.