(ChatGPT) அறிவுரையின் கீழ் தாயைக் கொலை செய்த நபர்
சட்ஜிபிடி (ChatGPT) எனும் தொழில்நுட்ப செயலியின் அறிவுரையின் கீழ் நபர் ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வந்த நபர் ஒருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
சட்ஜிபிடிக்கு (ChatGPT) பெயரிட்டு, பல மணிநேரங்கள் அவர் உரையாடி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சட்ஜிபிடி (ChatGPT) இவருடைய மன நோயை மேலும் மோசமாக்கி உள்ளது என்பது இந்த உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அவருடைய தாய் அவருக்கு மனநோய்க்கான மருந்தை வழங்கி கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக சட்ஜிபிடி (ChatGPT) பரிந்துரைத்துள்ளது. இதன் விளைவாக அவர், தனது தாயைக் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

Post a Comment