தந்தையின் மோட்டார் சைக்கிளில் முன் இருக்கையில் இருந்த போது உயிரிழப்பு
சீகிரியம திகம்பதஹா வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தம்புள்ளை, சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சசித்மி நெஹன்சா அலுவிஹாரே என்ற சிறுமி ஆவார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர், அவரது மகளை முன் இருக்கையில் வைத்துக்கொண்டு பயணித்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் ஒரு காரின் பின்புறத்தில் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில், மோட்டார் சைக்கிளின் முன் இருக்கையில் இருந்த மகள் வீதியில் தூக்கி வீசப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Post a Comment