"காஸாவை விட்டு நான், எங்கும் செல்ல மாட்டேன், சுவர்க்கத்தைத் தவிர..."
"நலமாக இருக்கிறாயா?
டேய் புத்திசாலி நண்பா, தற்காலிகமாக கத்தாருக்குச் சென்று உன் உயிரைக் காத்துக்கொள்."
"காஸாவை விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன், சுவர்க்கத்தைத் தவிர."
நேற்று வீரமரணம் அடைந்த அனஸ் அஷ்ஷெரீஃபை நோக்கி, அல்-ஜசீராவின் தலைமையகத்தில் தற்காலிகமாகப் பணிக்குச் சென்று தன் உயிரைக் காத்துக் கொள்ளுமாறு துருக்கியிலோ அல்லது வேறு எங்கோ உள்ள அவரது நண்பர் வாட்ஸ்அப்பில் அறிவுறுத்தியபோது, அவர் அளித்த பதில்தான் இது.
உஹத் மலைக்கு அப்பால் இருந்து சுவர்க்கத்தின் நறுமணம் வீசுவதாகக் கூறிக்கொண்டு போர்க்களத்தை நோக்கி ஓடிய முன்னோடியான அனஸ் பின் நள்ர் (ரலி).
இன்று நமக்கு மத்தியில் இதோ, சுவர்க்கத்தின் நறுமணம் நிறைந்த காஸாவை விட்டுப் பிரிய மனமில்லாமல் எண்ணற்ற அனஸ்கள்!
காஸாவை அழிப்பதற்காகத் தங்கள் கப்பல்களில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருக்கும் இக்காலத்து அபூஜஹல்களே... சுவர்க்கத்திற்குப் பதிலாகத் தங்களையே அல்லாஹ்வுக்கு விற்றுவிட்டு, மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த அனஸ்களை நீங்கள் என்ன செய்ய முடியும்?
கஃபாவின் இறைவன் மீது ஆணையாக, அவர்கள் என்றோ வெற்றி பெற்றுவிட்டார்கள்! 😍
DrCK Abdulla

Post a Comment