ஈரானிய தூதரை வெளியேற்றுகிறது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய மண்ணில் 2 யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என்று அந்நாட்டின் உளவுத்துறை நிறுவனம் கண்டறிந்ததை அடுத்து, ஆஸ்திரேலியா ஈரானிய தூதரை வெளியேற்றுகிறது.
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (ASIO), கடந்த ஆண்டு சிட்னியில் உள்ள யூதர்களுக்குச் சொந்தமான உணவகத்தையும் மெல்போர்னில் உள்ள இஸ்ரேல் ஜெப ஆலயத்தையும் குறிவைத்து இரண்டு தீ வைப்புத் தாக்குதல்களில் ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) ஈடுபட்டதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
"இவை ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு வெளிநாட்டு நாட்டால் திட்டமிடப்பட்ட அசாதாரணமான மற்றும் ஆபத்தான ஆக்கிரமிப்புச் செயல்கள்" என்று அல்பானீஸ் கூறினார்.
ஈரானிய தூதர் அஹ்மத் சடேகி மற்றும் மூன்று தூதரக ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேற ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அல்பானீஸ் கூறினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆஸ்திரேலியா ஒரு வெளிநாட்டு தூதரை வெளியேற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.

Post a Comment