Header Ads



ரணில் கைதுசெய்யப்பட்டமை தவறு என கூறுவது கவலை அளிக்கின்றது


ரணில் கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா..? கறுப்பு ஜுலைக் கலவரம், நூலகம் எரிப்பு, படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய நபர்தான் ரணில். மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டும் உள்ளது. இப்படிபட்ட நபரை பாதுகாக்கும் விததத்தில் கருத்து வெளியிடுவது கவலையளிக்கின்றது.


இந்நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். பலம் பொருந்தியவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படாது என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. ரணில் மட்டுமல்ல எப்படியான நபரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டே செயற்படவேண்டும். இதுவிடயத்தில் எவருக்கும் விதி விலக்கல்ல. 


யாழ்ப்பாணத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

No comments

Powered by Blogger.