Header Ads



கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் - அமைச்சர் விஜித ஹேரத்


கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.  தற்போது தென்னிந்தியாவில் தேர்தல் காலம் ஏற்பட்டுள்ளதால், தமது அரசியல் தேவைகளுக்காக ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர்.  


அவ்வாறான அரசியல் கருத்துக்களை பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை, இராஜதந்திர மட்டத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். 


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை கூறினார். 


“கச்சத்தீவை மீட்டு தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும்” என, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.