கவலைப்படாதீர்கள்..!
அல்ஜஸீரா தொலைக்காட்சியின் மூத்த செய்தி ஆசிரியர்தான் கதீஜா பின் குனா. அரை நூற்றாண்டுக்கும் மேலான இதழியியல் அனுபவம் கொண்டவர்.
காஸாவில் நடந்து வருகின்ற கொடூரங்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர். கூடப் பணியாற்றிய எத்தனையோ பத்திரிகையாளர்களை - அனஸ் பின் ஷரீஃபை, மர்யம் அபூ தக்காவை இழந்திருக்கின்றார்.
நடப்புகளைப் பார்த்து இந்த முதுபெரும் பத்திரிகையாளர் சொல்லியிருப்பதுதான் சரியான பஞ்ச். அவர் சொல்கின்றார்:
‘கொடுங்கோலன் நம்ரூத்தை ஈ ஒன்று மாய்த்தது.
கொடுங்கோலன் ஃபிர்அவ்னை இறுதியில் தண்ணீர்தான் சாய்த்தது.
காரூனின் ஆட்டத்தை மண்தான் முடிவுக்குக் கொண்டு வந்தது.
அப்ரஹாவின் கொட்டத்தை பொடிக் கற்களே முறியடித்தன.
பெரும் பெரும் கொடூரர்களை, கொடுங்கோலன்களை அற்பமான, வெகு சாதாரணமான படைப்புகளைக் கொண்டுதான் அல்லாஹ் அழித்தொழிக்கின்றான்.
எனவே இன்று நாலாபுறமும் ஓங்கி பேயாட்டம் போடுகின்ற கொடுங்கோலர்களைப் பார்த்து இவர்களின் முடிவு எப்படித்தான் வரும் என்று மலைக்காதீர்கள்....’
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
(கதீஜா பின் குனா,, அல்ஜீரியாவைச் சேர்ந்தவர். பல்சமயக் கலந்துரையாடல்களிலும் சமூக நல்லிணக்கக் கருத்துப் பரிமாற்றங்களிலும் பேரார்வமும் பெரும் ஈடுபாடும் கொண்டவர். தய்யிப் எர்தகான், முஹம்மத் மோர்ஸி, அஹ்மதிநஜாத், ஹாமித் அல்கர்ஸாய், அல்ப்ஷீர், எனப் பெரும் பெரும் ஆளுமைகளுடன் நேர்காணல் செய்தவர். பல விருதுகளையும் பெற்றிருக்கின்றார்)
Azeez Luthfullah

Post a Comment