அரசாங்கம் அச்சமடைந்துள்ளது - தயாசிறி
முடிந்தால் மக்களை ஒன்று திரட்டுமாறு NPP சவால் விடுத்தது. அதனை செய்தபின் தற்போது ஒன்று கூடியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றனர். மக்கள் தாமாகவே நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடினர். மாறாக யாரும் அவர்களை திட்டமிட்டு அழைக்கவில்லை. அதனாலேயே அரசாங்கம் அச்சமடைந்துள்ளது.
யார் எதைக் கூறினாலும் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமின்றி ஆளுந்தரப்பில் குற்றமிழைப்பவர்களுக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அமைச்சர்களான குமார ஜயக்கொடி, வசந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோருக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டுள்ள போதிலும், சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்காக நாம் காத்திருக்கின்றோம்.
கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கருத்து வெளியிடும் போது தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்,

Post a Comment