Header Ads



விண்வெளி பாடம் படிக்கப்போகும் அரபிக் கல்லூரி மாணவர்.


ஹம்ஸா சாதிக். இந்தியா - கோழிக்கோடு ஜாமிஆ மதீனத்துந்நூர் அரபிக் கல்லூரியில் உலகக்கல்வியுடன் இணைந்த மார்க்கக்கல்வி பாடத்திட்டத்தில் பயின்று இந்த ஆண்டு +2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஏ+ மார்க்குடன் தேர்ச்சி பெற்றவருக்கு இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் பல்கலைக்கழகமான IIST ல் மேற்படிப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது.


Indian Institute of Space Science and Technology (IIST) ல் பி.டெக் Aerospace Engineering படிக்க தேர்வான ஹம்ஸா சாதிக் எளிய குடும்பத்தின் பிள்ளை..


முற்றிலும் மெரிட் அடிப்படையில் வருடத்திற்கு 60மாணவர்களுக்கு மட்டுமே அட்மிஷன் வழங்கும் விண்வெளி குறித்த கல்வியை இந்த வருடம் கற்கப்போவோரில் இவரும் ஒருவர்..


இந்த IIST நிறுவனத்தில் அட்மிஷன் கிடைக்க முக்கிய தகுதியாக  JEE Advanced நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..


ஜாமிஆ மதீனத்துந்நூர் அரபிக் கல்லூரி தங்கள் மாணவர்கள் இந்திய அளவில் நடக்கும் அனைத்து நுழைவுத்தேர்விலும் கலந்து கொள்ள சிறப்பு பயிற்சி வழங்குகின்றனர் என்பது ஏனைய இங்குள்ள அரபிக் கல்லூரி நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை...


Colachel Azheem

No comments

Powered by Blogger.