இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி துறையை கைப்பற்ற, சீனாவின் மாபியாக்கள் முயற்சி
(தினகரன்)
கம்போடியா, லாவோஸ் மற்றும் மியன்மாரின் பிரபலமற்ற தங்க முக்கோணத்தைப் போலவே, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பகுதியை சீன நாட்டினர் கைப்பற்றும் ஒரு பரவலான நடவடிக்கையை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உட்பட பல அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும் சீனாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டு கணினி மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சில, சீன நாட்டவர்களுக்கு இலங்கை குடியிருப்பு அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு தற்போது தெரிவித்துள்ளது.
இந்த கணினி மோசடியில் ஈடுபட்டவர்கள், ஏற்கனவே கம்போடியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 60 வீதத்தை கைப்பற்றியுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக கம்போடியாவால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை எனவும் கணினி மோசடி தொடர்பிலான சர்வதேச நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்தால், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு விசாவையும் GSP பிளஸ் சலுகையையும் பாதிக்கும் என்பது தவிர்க்க முடியாதாகிவிடும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Post a Comment