சட்டமா அதிபருக்கு டுபாயிலிருந்து கொலை அச்சுறுத்தல்
டுபாயில் மறைந்திருக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் குழுவினால், சட்டமா அதிபர் திலீப பீரிஸின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அவரது பாதுகாப்புக்காக ஒரு சிறப்பு பொலிஸ் குழு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சதி தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திலீப பீரிஸின் வீட்டையும் அவர் பயணிக்கும் போது பாதுகாப்பதற்காக இந்த சிறப்பு பொலிஸ் குழு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. R

Post a Comment